கோமாவில் பெண் - போலி டாக்டர் மீது புகார்
சென்னை:சென்னை அருகே போலி டாக்டர் ஒருவர் அளித்த தவறான சிகிச்சையால் 44 வயது பெண் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோமா நிலையில் இருந்த பெண்ணுடன் காவல்துறை ஆணையரை சந்தித்த அவரது மகள் புகார் கொடுத்தார்.
சென்னை அருகே உள்ளது நன்மங்கலம். இப்பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். நேற்று காலை கோமா நிலையில் இருக்கும் தனது தாயார் கோகுலலட்சுமியை (44) ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் ஆணையரை சந்தித்த அவர் அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது தாய் கோகுலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. மேலும் மோசமானது.
இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, எனது தாய் கோமா நிலைக்கு போய் விட்டதாக கூறினர். மேலும் ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் வேறு மருத்துவமனைக்கு எனது தாயாரை அழைத்துச் சென்றனர். அங்கும் ஒரு வாரம் வரை சிகிச்சை அளித்தனர்.
அதன் பிறகு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி எனது தாயாரை என்னிடம் ஒப்படைத்தனர். அவருக்கு அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டது.
உடனே வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்து
தற்போது கோமா நிலையில் அவர் இருக்கிறார். அவரது உடல் நிலையில் மாற்றமே இல்லை.
எனது தாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் போலி டாக்டர் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது. அவர் முறையாக மருத்துவம் படிக்காதவர். பலருக்கு இது போன்று தவறான சிகிச்சை அளித்து வந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தினேஷ்குமார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications