சென்னையில் மகிரிஷி யோகியின் பக்தர் தற்கொலை
சென்னை: சமீபத்தில் நெதர்லாந்தில் மரணமடைந்த மகரிஷி மகேஷ் யோகியின் பக்தர் ஒருவர், யோகியின் மறைவுத் துயரைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
ஆழ்நிலை தியானத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் மகேஷ் யோகி. சமீபத்தில் தனது 91வது வயதில், நெதர்லாந்து நாட்டில் மரணமடைந்தார்.
இந்த நிலையில் யோகியின் மறைவைத் தாங்க முடியாமல் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொளத்தூர் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். 49 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். விருப்ப ஓய்வு பெற்றவர்.
சங்கமித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் இவருக்கு உள்ளனர். தினசரி நீண்ட நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவது ஆனந்தனின் வழக்கம். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். யோகியின் தீவிர பக்தர்களில் ஒருவர்.
யோகி மரணமடைந்தது முதல் பெரும் வருத்தத்தில் இருந்து வந்தார் ஆனந்தன். யாருடனும் பேசாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஆனந்தன்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், நான் கடவுளிடம் செல்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் குருநாதர், கடவுள் மகரிஷி சென்ற இடத்திற்கு நான் செல்கிறேன். எனது ஆன்மா கடவுள் இருக்குமிடத்திற்கு செல்கிறது என்று எழுதி வைத்துள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications