சென்னையில் திடீர் மழை
சென்னை: கோடை காலம் ஆரம்பித்து விட்டதோ என எண்ணும் அளவுக்கு வெயில் அடித்துக் கொண்டிருந்த சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்து சென்னைவாசிகளை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் வந்த வேகத்தில் மழை நின்றதால் அது புழுக்கத்தை கிளப்பி விட்டுள்ளது.
சென்னையில் மழைக்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதும் அளவுக்கு கடந்த பல நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இரவு நேர வெப்பநிலையும் கூட தற்போது கூடியுள்ளது. பனியும் கூட ஓரளவு குறைந்துள்ளது.
இதனால் வெயில் காலம் ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலும், புழுக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சென்னை நகரின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் திடீர் மழை பெய்தது.
நகரின் உட்புறப் பகுதிகளில் சற்றே வெளுத்து வாங்கும் அளவுக்கு அது கன மழையாக இருந்தது. இருப்பினும் அதிக நேரம் பெய்யாமல் மழை நின்று விட்டது. அதேசமயம் புறநகர்ப் பகுதிகளிலும் சடசடவென பெய்ய ஆரம்பித்த மழை அதே வேகத்தில் நின்றது.
இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் வியப்படைந்தனர். ஆனால் வந்த வேகத்தில் மழை நின்றதால் புழுக்கம் அதிகரித்தது.
தொடர்ந்து வானம் மேக மூட்டமாக இருந்தபோதிலும், லேசான வெயிலும் தொடருகிறது.
தென்மாவட்டங்களில் மழை:
இதே போல் தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சிவகாசி, பெரியகுளம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications