ஆதரவு வாபஸ் - மாயாவதி மறுபடியும் மிரட்டல்
போபால்: என் மீதான தாஜ் வணிக வளாக வழக்கை மீண்டும் விசாரித்து எனக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சிக்கிறது. எனவே அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறத் தீர்மானித்துள்ளோம். இதுகுறித்து மார்ச் 10ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உ.பி. முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி போபாலில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் அபரிமித வளர்ச்சியை கண்டு பொறாமையடைந்த பாரதிய ஜனதா கட்சி முன்பு, என் மீது தாஜ்மகால் வளாகம் கட்டுவது தொடர்பான வழக்கை போட்டது.
தற்போதுள்ள காங்கிரஸ் அரசு இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா அரசும், தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்தனர்.
82 வயதான என் பெற்றோரையும், உறவினர்களையும் தொந்தரவு செய்தனர். அவர்கள் பட்ட துயரம் மத்தியில் உள்ளவர்களுக்கு தெரியாது. காலம் ஒரு நாள் மாறும். பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமரும் போது அந்த துயரத்தை அவர்கள் உணரும் காலம் வரும்.
தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. எனக்கு கொலை மிரட்டல் இருப்பதால் கருப்பு பூனை படை பாதுகாப்பு அளிக்கும் படி பல முறை மத்திய அரசிடம் கேட்டேன். இந்த விஷயத்தை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதன் மூலமாக எனக்கு மறைமுக அரசியல் நிர்பந்தம் செய்கிறது மத்திய அரசு.
இவ்வளவு நிர்பந்தம் கொடுக்கும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
தற்போது உத்தரபிரதேச சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிகிறது. எனவே, இக்கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறும் விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார் மாயாவதி.
ஆனால் மாயாவதியின் மிரட்டலை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுபோன்ற மிரட்டலுக்கு அடிபணியாது. ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து தாராளமாக மாயாவதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications