முதல் நாளிலேயே ரிலையன்ஸ் பவர் பங்கு விலையில் பெரும் வீழ்ச்சி
மும்பை: மிகப் பெரிய விளம்பரத்துடன் அறிமுகமான ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகளின் விலை முதல் நாளிலேயே 13 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
சில வாரங்களுக்கு முன் பங்குகளை (IPO) வெளியிட்டது ரிலையன்ஸ் பவர். பங்குகள் விற்பனைக்கு வந்த ஒரு நிமிடத்திலேயே மொத்தமும் விற்றுத் தீர்ந்தன. ஒரு பங்கு ரூ. 450 என்ற அளவுக்கு விலை போன நிலையில் ரூ. 11,700 கோடியை நிமிடங்களில் திரட்டினார் ரிலையன்ஸ் பவர் அதிபர் அனில் அம்பானி.
மேலும் இதன்மூலம் உலகின் பணக்கார இந்தியர் என்ற முதலிடத்தையும் எட்டினார்.
இதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டு பல முன்னணி நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை இழந்தன. முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இந் நிலையில் ஐபிஓவுக்குப் பின் இன்று தான் ரிலையன்ஸ் பவரின் பங்குகள் முதன் முறையாக சந்தைக்கு வந்தன. ஆனால், மும்பை பங்குச் சந்தையில் (BSE) இவற்றின் விலை முதல் சில மணி நேரங்களிலேயே ரூ. 450ல் இருந்து சரிந்து ரூ. 426.50 ஆனது. தேசிய பங்குச் சந்தையிலும் (NIFTY) இதன் விலை ரூ. 435 ஆக சரிந்தது.
ஒரு கட்டத்தில் விலை ரூ. 398க்கு சரிந்து பின்னர் தாக்குப் பிடித்து ரூ. 410க்கு வந்தது. கட
கடைசி நிலவரப்படி ரூ. 440 முதல் ரூ. 447க்கு இந்தப் பங்குகள் விலை போய்க் கொண்டுள்ளன.
எப்படியிருப்பினும் அதன் அறிமுக விலையான ரூ. 450க்கு கீழே தான் விலை உள்ளது. வழக்கமாக ரிலையன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் அறிமுக விலையை விட மிக அதிகமாக விலை போகும். எடுத்தவுடனேயே சரிவில் ஆரம்பித்த ரிலையன்ஸ் பங்கு விலை இது தான்.
கடந்த சில வாரங்களில் விழுந்த அடியால் பங்குச் சந்தையில் நிலவும் அச்சமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
சந்தையில் பீதி நிலவுவதால் வொர்க்ஹார்ட் (Workhardt) மருத்துவமனை, எம்மார் எம்ஜிஎப் ஆகிய பெரிய நிறுவனங்கள் வெளியிட்ட பங்குகளை வாங்கவே ஆளில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் பங்குகளை திரும்பப் பெற்றுவிட்டன.












Click it and Unblock the Notifications