நக்ஸல்களிடம் துப்பாக்கிகள் பறி கொடுத்த 3 ஏட்டுகள் சஸ்பெண்ட்
தர்மபுரி: நக்ஸல்களிடம் துப்பாக்கிகளை பறி கொடுத்த அதியமான்கோட்டை காவல் நிலையத்தின் ஏட்டுகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், அங்கே அரை தூக்கத்தில் இருந்த காவலரை மிரட்டி, லாக்-அப் அறையின் பூட்டுகளை உடைத்து அங்கே வைக்கப்பட்டிருந்த 6 துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றது.
போலீஸ் நிலையத்திலேயே நடந்த இந்தக் கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நக்ஸலைட்டுகளின் கை வரிசையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவத்தையடுத்து வனப் பகுதியை ஒட்டியுள்ள தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த காவல் நிலையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. சஞ்சய் அரோரா, சேலம் சரக டி.ஐ.ஜி. செண்பகராமன், எஸ்பி நஜ்முல் ஹோடா ஆகியோர் பார்வையிட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலைய காவலர்களிடம் விசாரணை நடத்தினர்.
நக்ஸல் வேட்டையில் தீவிரமாக உள்ள கூடுதல் டி.ஜி.பி. விஜய்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்தார். சம்பவம் நடந்தபோது இரவு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மேலும் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள கிருஷ்ணநாயக்கன் கொட்டாய், வெள்ளாளபட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த ஏட்டுகள் சுப்பிரமணி, ராஜா, ராஜ மாணிக்கம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. நஜ்முல் ஹோடா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்கள் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக நஜ்முல்ஹோடா கூறியுள்ளார். நக்ஸல்கள் வந்தபோது ஒரே ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றவர்கள் இரவு ரோந்து என்ற பெயரில் எல்லா காவல் நிலையங்களிலும் நடக்கும் இரவு நேர கடைகளில் மாமூல் வசூலுக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது.
இருந்த ஒரு காவலரும் விழிப்புடன் இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications