வெடிகுண்டு வீசி ரவுடிகள் சண்டை-சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரவுடிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அப்போது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளையும் வீசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்துள்ள எண்ணூர் சிவகாமி நகரைச் சேர்ந்தவர் மாதவன். பிரபல ரவுடியான இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த தனசேகரன் என்ற ரவுடிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
சமீபகாலமாக சென்னையில் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவருவதால், தனசேகரன் வெளியூரில் பதுங்கியுள்ளார். எப்போதாவது எண்ணூருக்கு வரும் தனசேகரன், இன்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்தார்.
அவருடன் கூட்டாளிகளான பாலாஜி, செந்தில், ஒசாமா ஆகியோரும் உடன் வந்துள்ளனர். இதே திருமணத்திற்கு மாதவன் தன் கூட்டாளிகள் முத்துக்குமார், சிவக்குமார், கோபால் ஆகியோருடன் வந்திருந்தார்.
அப்போது இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கண் இமைக்கும் நேரத்திற்குள் கலவரமாக மாறியது.
இரு தரப்பு ரவுடிகளும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதற்கிடையில் தனசேகர் 2 கையெறி குண்டுகளை மாதவன் மீது வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மாதவன் கோஷ்டியைச் சேர்ந்த முத்துக்குமார், கோபால், சிவக்குமார் ஆகிய மூவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. காயம் அடைந்த ரவுடிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தால் திருமண வீட்டிற்கு வந்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவரத்திற்கான காரணமான தனசேகர் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications