25ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்

பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 25ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.
26ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்கிறார். மக்கள் பட்ஜெட்டாக இது இருக்கும் என்று ஏற்கனவே லாலு அறிவித்துள்ளதால் பல்வேறு சலுகைகள், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
29ம் தேதி 2008-09ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்வார். பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 3 மாதங்களுக்கு நடைபெறும் எனத் தெரிகிறது. பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுவதால் வழக்கம் போல இந்தக் கூட்டத் தொடரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications