காஞ்சிபுரம் அருகே பஸ்-கன்டெய்னர் லாரி மோதல்: 15 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே அரசுப் பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலையில் காஞ்சிபுரத்தில் இருந்து நெற்குன்றம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, காஞ்சிபுரத்தில் இருந்து வாலஜா நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது வெண்குடி என்ற கிராமம் அருகே நேருக்கு நேர் மோதியது.
இதில் அரசுப் பேருந்தின் டிரைவர், கண்டக்டர், லாரியின் டிரைவர் உட்பட 15 பேர் படுகாயமடைந்து காஞ்சிபுரம், சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் 12 பேர் பேருந்தில் வந்த பயணிகள் ஆவர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications