எம்.ஜி.ஆர் படம் கிழிப்பு: போராட்டம் நடத்திய தேமுதிகவினர் கைது
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தேமுதிக பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அதிமுக விளம்பரங்களில் போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
காயல்பட்டிணத்தில் கடந்த 7ம் தேதியும், தூத்துக்குடியில் 8ம் தேதியும், தேமுதிக பேனரில் இடம் பெற்றிருந்த எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டிருந்தது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தேமுதிகவினரை சமாதானம் செய்த பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் திருச்செந்தூரிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு விஜயகாந்தை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படம் கிழிக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூர் நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்தை சில மர்ம நபர்கள் கிழித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையறிந்த மாவட்ட செயலாளர் கோமதி கணேசன் தலைமையில் தேமுதிக தொண்டர்கள் நேற்று காலை திருச்செந்தூரில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தின் மீது சிறிய
போஸ்டர்களை ஓட்டினர்.
அதில் அதிமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏமான அனிதாராதாகிருஷ்ணனை கண்டித்து வாசகங்கள் இருந்தன. இதனால் போலீசார் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர் உட்பட 24 பேரை கைது செய்தனர்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications