அதிகாரிகளின் அலட்சியம் - தாமதமாகும் பயணம்
செங்கோட்டை: மதுரை வணிக பிரிவிலிருந்து முன்பதிவு பட்டியல் அனுப்புவதில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதால் செங்கோட்டையிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னைக்குத் தொடங்கியுள்ள ரயில் பயணம் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு 10 ஆண்டுகளுககு பின்பு அகல ரயில் பாதையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து கடந்த 7ம் தேதி தொடங்கியது. இந்த ரயிலில் செங்கோட்டை முதல் திருச்சி வரை உள்ள பயணிகளுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தினமும் மதுரை வணிக பிரிவிலிருந்து முன்பதிவு பட்டியல் அனுப்புவதில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதாக பயணிகள், ரயில்வே ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தினமும் செங்கோட்டையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இநத ரயில் கடந்த இரு தினங்களாக 10 முதல் 18 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்வதாகவும், முன்பதிவு பட்டியல் மதுரையிலிருநது ஆன்லைனில் அனுப்புவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால் முன்பதிவு செய்த பயணிகள் பட்டியல் கோச்களில் ஓட்டப்படாமல் இருப்பதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நேற்று இரவு 6.30 மணி முதல் 6.50 வரை முன் பதிவு பட்டியல் வராத காரணத்தினால் பயணிகள் திரண்டு முன்பதிவு அலுவலகத்தை முற்றுகையிடும் நிலையும் ஏற்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு தாமதத்துடன் புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications