சேது திட்டத்தை ரத்து செய்ய சு.சுவாமி கோரிக்கை
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமரை வலியுறுத்தும்படி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து சுவாமி மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் சட்டத்தின் 78வது பிரிவைப் பயன்படுத்தி, சேது சமுத்திரத் திட்டம் குறித்த ஆவணங்களை வரவழைத்து அதை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் ராமர் பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேறு வழி இல்லாவிட்டால் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமருக்கு அவர் அறிவுறுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தால் தேசிய பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும். மேலும், பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டத்தால் எந்தப் பலனும் இல்லை.
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில், மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையில், விலங்கு வதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கலாம் என தமிழக அரசு கூறினால் அதனாலும் பல கோடி இந்துக்களின் மனங்கள் புண்படும். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் மக்கள் மனம் புண்படும் என்று கூறிய தமிழக அரசு இப்போது, கோடிக்கணக்கானோரின் மனங்கள் புண்படும் என்பதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறது.
ராமர் பாலத்தை இடித்தால் மக்களின் மத உணர்வுகள் புண்படும். எனவே அதை இடிக்கக் கூடாது என்று அகில இந்திய இமாம்கள் அமைப்பும் கூறியுள்ளது. அதையும் குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications