28 இலங்கை வீரர்கள் பலி
கொழும்பு: இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடந்த அதிரடித் தாக்குதலில் 28 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தினசரி தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 28 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மன்னார் அருகே இன்று விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்து ராணுவம் கவச வாகனங்களில் முன்னேறியது.
அப்போது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளின் மத்தியில் ராணுவத்தினர் சிக்கிக் கொண்டனர். முன்னாலும் போக முடியாமல், பின்னேறிச் செல்லவும் முடியாமல் சிக்கிக் கொண்ட ராணுவ வீரர்கள் தவித்தனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள், ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 28 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்னர். பல கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டன.












Click it and Unblock the Notifications