சிறுவர்களிடம் சில்மிஷம்-2 குழந்தைகளின் தந்தை கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சிறுவர்களிடம் தகாத முறையில் நடந்து, செக்ஸ் சில்மிஷம் செய்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்ர் குமாரின் மகன் துளசிராஜன் 6ம் வகுப்பு படித்து வருகிறான். இதே பகுதியை சேர்ந்த ராஜா தனியார் நிறுவனத்தில் குமஸ்தாவாக பணியாற்றுகிறார்.
இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி பிரிநது சென்று விட்டார்.
இந் நிலையில் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த துளசிராஜனை வீட்டிற்குள் அழைத்து சென்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ராஜா.
இதை தட்டிக் கேட்ட துளசிராஜனின் அண்ணன் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினரை ராஜா மிரட்டியிருக்கிறார். இது தொடர்பாக மணிகண்டன் வடசேரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, ராஜா பலமுறை சிறுவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications