போலீஸ் நிலையத்தில் 'பாரா' காவலர்கள் வெளியே செல்ல தடை
நெல்லை:இரவில் போலீஸ் நிலையங்களில் பணியில் இருக்கும் பாரா காவலர்கள் (காவல் நிலைய பாதுகாப்புப் பணி) வெளியே செல்லக் கூடாது என்று நெல்லையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 8ம் தேதி ஒரு கும்பல் நுழைந்து கதவுகளை உடைத்து உள்ளே இருந்த துப்பாக்கிகள், வாக்கி டாக்கிகளை திருடி சென்றது.
போலீஸ் நிலையத்தில் இரவில் பணியிலிருந்த ஒரு போலீஸ்காரர் தூங்கியதும் மற்றவர்கள் வெளியே போய்விட்டதுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாராவில் உள்ளவர்கள் வெளியே போக கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களின் தகவல் பலகையிலும் உத்தரவு ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் போலீஸார் பற்றாக்குறையில்தான் உள்ளனர். இருக்கின்ற காவலர்களும் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான காவல்நிலையங்களில் பாரா காவலர்களே நிற்பதில்லை.
முக்கிய போலீஸ் நிலையங்களை தவிர ஏனைய போலீஸ் நிலையங்களில் இரவில் பாராவுக்கு யாரும் நிற்பதில்லை. மேலும் பகலில் வேலை செய்த காவலரை இரவில் கூடுதல் பணிச் சுமையாக பாராவுக்கு நிறுத்துவதா என்று காவலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications