ஏழைகளுக்கு கருணாநிதி நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கலைஞர் அறக்கட்டளை மூலமாக 32 ஏழைகளுக்கு ரூ. 3.20 லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் வங்கியில் வைப்பு வைக்கப்பட்டுள்ள ரூ. 4 கோடி நிதியிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணம், ஆண்டுதோறும் ஏழை, எளியவர்களின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு இந்த அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. இதுவரை ரூ. 73.45 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.












Click it and Unblock the Notifications