தமிழக பால் வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு!
ஈரோடு: தமிழகத்தில் பால் நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க பணியாளர் இணையம் ஆகியவற்றின் பொதுக் குழுக் கூட்டம் ஈரோட்டில் சங்க இணைச் செயலாளர் ராமசாமி தலைமையில் நடந்தது.
இதையடுத்து சங்கத் தலைவர் செங்கோட்டுவேல் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம் முழுவதும் சுமார் 700 பால் கூட்டுறவு சங்கங்களில் 7 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் 18 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது ஆவின் நிர்வாகம், பசும் பாலுக்கு ரூ.12ம், எருமைப் பாலுக்கு ரூ.14ம் வழங்கி வருகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் இதை விட அதிகமாக தருகின்றன.
இந் நிலையில் ஆவின் நிறுவனம் எங்களிடம் பால் கொள்முதல் செய்வதைக் குறைந்து விட்டது. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
எனவே ஒரு லிட்டர் பசும் பாலுக்கு ரூ.17ம், எருமைப்பாலுக்கு ரூ.24ம் ஆவின் நிர்வாகம் உயர்த்தி தரவேண்டும் .
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி எங்களது சங்கம், மற்றும் சக தோழமை சங்கங்கள் சார்பில் பால் கொள்முதல் நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தோம்.
ஆனால் கோரிக்கை நிறைவேற ஒரு மாத கால அவகாசம் தேவை என்று பால் வளத்துறைத்துறை அமைச்சர் மதிவாணன் கேட்டுக் கொண்டதால் இந்த போராட்டம் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications