ரியாத் இந்தியப் பள்ளி ஆசிரியர் மரணம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ரியாத்தில் உள்ள சர்வதேச இந்திய பள்ளியின் ஆசிரியரான டாக்டர் முகம்மது அப்துல் வாஹித் மரணமடைந்தார்.

மாரடைப்பு ஏற்பட்டதால் ரியாத் தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவரது உடல் அடக்கம் ரியாத் நகரில் இன்று நடைபெறுகிறது. உருது, அரபி மற்றும் பெர்ஷிய மொழியில் டாக்டர் பெற்றவரான டாக்டர் வாஹித், கிங் சாத் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பெற்றுள்ளார்.

ரியாத் சர்வதேச இந்திய பள்ளியில் செகண்டரி அரபி ஆசிரியராக 2004ம் ஆண்டு மே 1ம் தேதி பணியில் சேர்ந்தார்.

கிங் சாத் பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் மையத்திலும் பணியாற்றியுள்ளார். டெல்லி அகில இந்திய ரேடியோவிலும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அரபி இலக்கியம், உருது இலக்கியம் குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அரபி சிறுகதைகளையும் அவர் உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+