துபாயில் இந்திய டிரைவரைக் காணவில்லை

இந்தியாவைச் சேர்ந்தவர் அப்துல்லா அப்துல் காதர் (56). துபாயில் உள்ள லக்கானி டிரேடிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். துபாயில் உள்ள வாபி சிட்டி மால் என்ற வணிக வளாகத்தில், தனது ஸ்பான்சரின் மகளை சனிக்கிழமை இறக்கி விட்டுள்ளார் காதர். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.
அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்து துபாயில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், விபத்து சிகிச்சைப் பிரிவுகள், கிளினிக் உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்தியும் காதர் குறித்தத் தகவல் ஏதும் இல்லை.
காதர் காணாமல் போனது குறித்து பார் துபாய் ரிபா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துபாய் இந்தியத் தூதரக அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸிஸ் பணியாற்றி வருகிறார் காதர். அவர் காணாமல் போனதால் அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காணாமல் போன அன்று காதர், தங்க வண்ணத்திலான டயோட்டா காம்ரி வாகனத்தில் பயணித்தார். அந்த வாகனத்தின் எண் எப்.40907.
காதர் குறித்த தகவல் தெரிந்தால் அக்பர் அலி, செல்போன் எண் 050-4522839 என்பவரையோ அல்லது சுஜாயுதீன், செல்போன் 050-7890397 என்பவரையோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications