ஓரினச் சேர்க்கை-வாலிபரை கொன்ற போலீஸ்காரர் தலைமறைவு
நெல்லை: ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த வாலிபரை இரு ஆண்டுகளுக்கு முன் கொலை செய்த ஆயுதப்படை காவலர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மனூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பம்பிங் ஸ்டேஷனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நெல்லை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரரான மார்த்தாண்டம் என்பவர் அறிமுகமானார். மார்த்தாண்டத்துக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆனால், இவர் ஒரு ஓரினச் சேர்க்கை வெறியன்.
இவர் வெள்ளைசாமியை வற்புறுத்தி இந்த கேவலமான செயலில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளார்.
இந் நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன் வெள்ளைசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்தபோது மார்த்தாண்டம் தான் அவரைக் கொலை செய்தார் என்று தெரியவந்தது.
ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த வெள்ளைசாமியை நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளில் சராமரியாக மிதித்து அவரை கொன்றுள்ளார் மார்த்தாண்டம்.
இதையடுத்து மார்த்தாண்டம் மீது புகார் பதிவு செய்தனர் போலீசார். இதையடுத்து அவர் நீண்ட விடுப்பில் சென்றார். ஆனால், அவரை போலீசார் கைது செய்யாமல் இருந்தனர்.
இந் நிலையில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு சமீபத்தில் அதிகாரிகளின் பார்வைக்குச் சென்றது. இதையடுத்து 2 வாரங்களுக்கு முன் மார்த்தாண்டத்தை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் அவரை உடனே கைது செய்யவும் உத்தரவிட்டனர்.
இைதயறிந்த மார்த்தாண்டம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து மார்த்தாண்டம் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications