தமிழக நகர்களில் பெட்ரோல் விலை-பெங்களூரில் அநியாயம்
சென்னை: மத்திய அரசு அறிவித்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துவிட்டது.
புதிய விகிதப்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவர விவரம்:
சென்னை:
பெட்ரோல்-புதிய விலை ரூ. 49.61 (பழைய விலை ரூ. 47.44)
டீசல்- புதிய விலை ரூ. 34.40 (பழைய விலை ரூ. 33.30)
மதுரை:
பெட்ரோல்- ரூ. 49.82 (ரூ. 47.62)
டீசல்- ரூ. 34.95 (ரூ. 33.80)
கோவை:
பெட்ரோல்- ரூ. 49.58 (ரூ. 47.38)
டீசல்- ரூ. 34.84 (ரூ. 33.55)
திருச்சி:
பெட்ரோல்- ரூ. 49.72 (ரூ. 47.53)
டீசல்- ரூ. 34.84 (ரூ. 33.72)
சேலம்:
பெட்ரோல்- ரூ. 49.76 (ரூ. 47.55)
டீசல்- ரூ. 34.88 (ரூ. 33.73)
புதுச்சேரி:
பெட்ரோல்- ரூ. 43.63 (ரூ. 41.70)
டீசல்- ரூ. 32.63 (ரூ. 31.59)
பெங்களூர் அநியாயம்:
இந்தியாவிலேயே பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பது பெங்களூரில் தான். அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை லிட்டர் ரூ. 52.86 (பழைய விலை ரூ. 50.58) ஆகும்.
போராட்டங்கள் :
இந்த விலை உயர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப் போவதாக பாஜகவும் இடதுசாரிகளும் அறிவித்துள்ளன.
விலை உயர்வுக்கு பதிலாக பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைக்கலாம் என்று இடதுசாரிக் கட்சிகள் யோசனை தெரிவித்துள்ளன.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை மிகக் கடுமையானது.
இந்த விலையேற்றத்தை அரசு திரும்ப பெற வேண்டும். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து, சாமான்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரசின் முடிவை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப அரசின் வரி வருமானமும் உயரும். எனவே இதை எண்ணெய் நிறுவனங்களோடு பகிர்ந்து கொண்டால் விலை ஏற்றத்திற்கே அவசியமில்லை என்றார் எச்சூரி.
இதேபோல தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அதே போல பாஜகவும் தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், ஆட்சியில் இருந்தபோது பாஜகவும் வருடந் தவறாமல் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியது நினைவுகூறத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications