போலி விசாவுடன் வந்த 7 வங்கதேசத்தவர் கைது
சென்னை: சென்னையிலிருந்து கொழும்பு வழியாக மாலத்தீவுக்கு போலி விசாவில் செல்ல முயன்ற 7 வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு சென்னையிலிருந்து கொழும்பு வழியாக மாலத்தீவு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது.
அப்போது 7 வங்கதேசத்தவரின் விசாக்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் அந்த விசாக்கள் போலியானவை என்று தெரிய வந்தது.
இதையடுத்து ஜலால் சாதிக் அலி (25), குவாசிம் அப்துல் ரபீக் (27), பஷீர் (24), அஜிஸ் மியா (28), ஷகியுதுல் இஸ்லாம் (30), சதார் ஹனீப் (26), அல்லம் ஹூசைன் (28) ஆகியோரை விமான நிலைய போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் வங்கதேசத்திலிருந்து கொல்கத்தாவுக்கு ரயில் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையப் போலீஸார், 7 பேரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இரவு முழுவதும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீவிரவாதிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 7 பேரும் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications