பாமக பிரமுகருடன் மதானி ஆதரவாளர்கள் ஆலோசனை-உளவுப் பிரிவு 'உஷார்'
நெல்லை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பின்னர் சிறைவாசத்திலிருந்து மீண்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள், பாமக முக்கியப் பிரமுகருடன் ஆலோசனை நடத்திச் சென்றுள்ளனர்.
கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்து வரும் மதானி, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இவரின் ஆதரவாளர்கள் 5 பேர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பாமக பிரமுகர் ஓருவரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்தனர். அங்கு தங்கி பாமக பிரமுகருடன் ஆலோசனை நடத்தினர்.
நேற்று முன்தினம் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு பிரபல கட்சியின் முக்கிய பிரமுகர் வீட்டிற்கு சென்றனர்.
இவர்கள் வந்து போன தகவல் உளவு துறையினருக்கு தெரிய வந்தது. உடனடியாக சென்னையில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களின் உத்தரவின் பேரில் அம்பையை சேர்ந்த பாமக முக்கிய பிரமுகரை உளவு துறையினர் அழைத்து சென்று விசாரனை நடத்தினர். பிறகு அவரை நாகர்கோவில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications