மலேசிய தூதரகம் முன் ராம.கோபாலன் போராட்டம்
சென்னை: மலேசியாவில் இந்திய வம்சாவழியினருக்கு முழு உரிமைகள் வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தலைமையில் நடக்கவிருந்த இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும், இன்று காலை ராம கோபாலன் தலைமையில் 30 இந்து முன்னணி தொண்டர்கள் மலேசிய தூதரகம் முன் கூடி மலேசிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் மலேசிய தூதரக காவலர்களுக்கு பூச்செண்டு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் தடுத்தபோது சாலை மறியல் செய்ய முயன்றனர். இதையடுத்து ராமகோபாலன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ராமகோபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:
மலேசியாவை வளப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இந்துக்களை ஆங்கிலேயர்கள் அனுப்பி வைத்தனர். பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் ரப்பர், தேயிலை தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.
மலேசிய நாட்டை வளமாக்கிய அவர்களுக்கு வாழ்வுறுதி அளிக்கப்படவில்லை. கல்வி, வேலை வாய்ப்பு இல்லை. பிச்சைகாரர்களாகவும், அனாதைகளாகவும், அடிமைகளாகவும் நடத்தப்படுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இதை கண்டிக்கும் வகையிலும், உரிமை வழங்க வற்புறுத்தியும் மலேசிய தூதரக அதிகாரிகளுக்கு பூச்செண்டு கொடுத்து, போராட்டம் நடத்துகிறோம். மலேசியாவிலும் இன்று போராட்டம் நடக்கிறது.
இந்தப் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும். மலேசியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யக்கூடாது. ஐ.நா. சபை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து மலேசியாவை நீக்க வேண்டும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications