மான்ஸா தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த இந்திய தூதர்கள்
{image-tanzania-tamil (1)250_16022008.jpg tamil.oneindia.com}மான்ஸா (தான்சானியா): தான்சானியா நாட்டிற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் அந்நாட்டின் மான்ஸா நகர தமிழ்ச் சங்கத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவி்ற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் இரண்டு நாள் பயணமாக மான்ஸா வந்தார்.
அவரது மனைவியும், மடகாஸ்கர் நாட்டிற்கான இந்தியத் தூதருமான ஹேமலதா பகீரத்தும், அவர்களது குழந்தைகளும் உடன் வந்தார். (ஹேமலதா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
அவர்களுக்கு மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மிக ஆர்வமாகக் கேட்டறிந்தனர்.
சங்கத் தலைவர் முகம்மத் ஹோஸ்மின் தமிழ்ச் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சித்ரா ராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட விருந்திலும் கலந்து கொண்ட தூதர் தம்பதி, தமிழ்க் குடும்பத்தினருடன் மிக மகிழ்ச்சியுடன் உரையாடினர்.
மான்ஸா வாழ் இந்தியர்களுக்கு தரமான மருத்துவம், கல்வி வசதிகள் இல்லாத நிலையை சங்க உறுப்பினர்களான செல்வராஜ், ஷெரீன் ஆயிஷா லியாகத் ஆகியோர் சுட்டிக் காட்டினர்.
தமிழ்ச் சங்க உறுப்பினரான ராஜேஷ் திருமுகத்தின் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள பிரச்சனையை தீர்க்க உதவியாளருக்கு பகீரத் உத்தரவிட்டார். தூதர் தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஜி.எம்.ராஜன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மான்ஸா நகர தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications