இங்கிலாந்தில் சிகரெட் வாங்க பெர்மிட்!

இங்கிலாந்து அரசின் சுகாதாரத் துறைக்கு ஆலோசனை சொல்லும் ஹெல்த் இங்கிலாந்து என்ற அமைப்பு இப்படி ஒரு பரிந்துரையை சுகாதாரத் துறைக்கு செய்துள்ளது. அதன்படி சிகரெட் வாங்க விரும்புவோர், சுகாதாரத் துறையிடம் 10 பவுண்டு பணம் கட்டி பெர்மிட் வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த பெர்மிட்டைக் காட்டினால்தான் சிகரெட் கிடைக்குமாம்.
பெர்மிட் இல்லாதவர்களுக்கு கடைக்காரர்கள் சிகெரட் தர மாட்டார்கள். இதன் மூலம் சிகரெட் பழக்கத்தை மக்கள் கைவிட ஏதுவாக இருக்கும் என்பது ஹெல்த் இங்கிலாந்தின் எண்ணம்.
இதுகுறித்து ஹெல்த் இங்கிலாந்து அமைப்பின் தலைவர் ஜூலியன் லி கிராண்ட் கூறுகையில், இந்த பெர்மிட் முறையால் சிகெரட் புகைப்போரின் எண்ணிக்கை குறையக் கூடும்.
மேலும் இதன் மூலம் வசூலாகும் பணம் தேசிய சுகாதாரத் திட்டத்துக்கும் பயன்படும். இப்படி இரட்டை லாபங்கள் இதில் உள்ளன என்றார். லி கிராண்ட், முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் முன்னாள் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் புகைபிடிப்போர் உரிமைக் குழு என்ற அமைப்பு இந்த பெர்மிட் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது புகை பிடிப்போரின் உரிமையை பறிக்கும் செயல் என்று அது கோபப் புகையைக் கக்கியுள்ளது.
ஏற்கனவே சிகரெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிகரெட் வாங்க பெர்மிட் என்றால் எப்படி என்று அந்த அமைப்பினர் ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் இப்படி பெர்மிட் முறையைக் கொண்டு வந்தால்தான் புகை பிடிப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பது லி கிராண்ட்டின் கருத்து.
அவர் கூறுகையில், 70 சதவீத புகை பிடிப்பாளர்கள் சிகரெட் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பெர்மிட் முறை, சீக்கிரமாகவே இதை விட்டு விட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும். எனவே இந்த பெர்மிட் முறையால் நல்ல பலனே உண்டாகும் என்கிறார்.
இந்த பெர்மிட் யோசனை குறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
நம்ம ஊரிலும் கூட இப்படி கொண்டு வரலாமே!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications