டாக்டர்கள், வழக்கறிஞர்களுக்கு வேலை தரும் காக்னிசன்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னணி பிபிஓ நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜீஸ் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டட் அக்கெளன்ட்டகள் உள்பட 14,700 பேரை இந்த ஆண்டு புதிதாக பணியில் சேர்க்கவுள்ளது.
டாலர் மதிப்பு குறைவால் யாகூ, ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஆட் குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த ஆள் சேர்ப்பில் காக்னிசன்ட் இறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் 19,600 பேரை பணியில் அமர்த்த காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளதாக அதன் எச்.ஆர். பிரிவின் துணைத் தலைவர் பாஸ்கர் தாஸ் தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த நிறுவனத்தில் 55,400 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அறிவியல் பட்டதாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டட் அக்கெளன்ட்டகள், பார்மஸிஸ்டுகள், பயோ டெக்னாலஜி பட்டதாரிகள் உள்ளிட்டவர்களை பணியமர்த்தவுள்ளது இந்த நிறுவனம்.












Click it and Unblock the Notifications