கட்சி தேர்தல்-திமுகவினர் அடிதடி, போலீஸ் தடியடி!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திமுக கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின்போது இரு கோஷ்டிகள் இடையே பயங்கர அடிதடி கலாட்டா நடந்தது. இதையடுத்து திமுகவினரை போலீஸ் தடியடி நடத்தி கலைத்தனர்.
மாநிலம் முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் நகரம் 33 வார்டுக்ளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் காயம்பு, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் திமுக நகரச் செயலாளர் ரத்தினம் தலைமையில் ஒரு கோஷ்டியினர் 33 வார்டுகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹீர், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், சுபாஷ்சந்திரபோஸ், சேதுராஜன், தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலைக்கண்ணு, ஆகியோர் தலைமையில் 33 வார்டுகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர்.
ஆனால் இரு தரப்பும் போலீசாரை அலட்சியப்படுத்திவிட்டு மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பும் அடித்துக் கொண்டு நடு ரோட்டில் உருண்டனர். இதைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போய் ஓடினர்.
இதையடுத்து போலீசார் திமுகவினர் மீது தடியடி நடத்தினர். இதை எதிர்பார்க்காத திமுகவினர் திகைத்துப்போய் ஆளுக்கு ஒரு பக்கமாக கலைந்து ஓடினர்.
இந்த சண்டை-தடியடியால் அந்த இடமே போர்களம் போல காட்சியளித்து.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications