லஞ்சம் வாங்கி பெண் எஸ்ஐ கையும் களவுமாக கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் பாக்கியலட்சுமி (20) சென்னையைச் சேர்ந்த குரு என்பவரைக் காதலித்தார். இந்தக் காதலை பெற்றோர் ஏற்கவில்லை. இதையடுத்து தனக்கும் காதலருக்கும் பாதுகாப்பு கோரி திருவலங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரை விசாரித்தார் திருவலங்காடு காவல் நிலைய பெண் எஸ்.ஐயான கோமதி. அப்போது, இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்தால் உங்களை உள்ளே தள்ள முடியும். நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் ரூ. 50,000 லஞ்சம் தர வேண்டும் என தாமோதரனை மிரட்டியுள்ளார்.
ஒரு பக்கம் மகள் தந்த நெருக்கடி, இன்னொரு பக்கம் எஸ்.ஐ. மிரட்டல் என இரு பெண்களிடம் சிக்கித் தவித்த தாமோதரன், இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு தகவல் தந்தார்.
அவர்கள் பணத்துடன் போலீஸ் குவார்டர்சில் உள்ள கோமதியின் வீட்டுக்குப் போகுமாறு கூறினார்.
இதையடுத்து முதல் கட்டமாக ரூ. 10,000 டோக்கன் அட்வான்சாக தருவதாக தாமோதரன் கூறவே, வீட்டுக்கு வருமாறு கோமதியே அழைத்தார்.
இதைத் தொடர்ந்து பணத்துடன் தாமோதரன் அங்கு சென்றார். வெளியே லஞ்ச ஒழிப்புப் போலீசார் பதுங்கியிருந்தனர். பணத்தை வாங்கிக் கொண்டு, மிச்சப் பணம் ஒரு வாரத்துல வந்து சேரணும் என கோமதி மிரட்டிக் ெகாண்டிருந்தபோதே போலீசார் உள்ள நுழைந்து கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications