மாசி திருவிழா-நாளை திருச்செந்தூர் கோவில் தேரோட்டம்
திருச்செந்தூர்: மாசித் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புகழ்பெற்ற மாசித் திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார்.
நேற்று 8ம் திருநாளையொட்டி காலையில் மேலக்கோவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன் பின்னர் சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் வலம் வந்தார்.
வழி நெடுகளிலும் திரளான பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் உடைத்து பன்னீர், மரிக்கொழுந்து, பச்சை பட்டுகள் சாத்தி வழிபட்டனர்.
இந்த திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.
பெரிய தேரில் சுவாமியும், சிறிய தேரில் அம்பாளும் வெளிவீதிகளில் பவனி வருகிறார்கள். தேர்திருவிழாவை காணவும், தேர் இழுக்கவும், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் பாத யாத்திரையாகவும் வந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications