5 ஆண்களுடன் தொடர்பு-மனைவியைக் கொன்ற போலீஸ்காரர் வாக்குமூலம்
சென்னை: 5 ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் மனைவியைக் கொன்றேன் என போலியான பெயரில் விமானத்தில் சென்னைக்கு வந்து மனைவியை ெகாலை செய்துவிட்டு டெல்லிக்குத் தப்பிய போலீஸ்காரர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை ஆவடியைச் சேர்ந்த சுதாகர் (35) தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலெட்சுமி (25). இவர்களுக்கு 3 வயது பெண் குழந்தை உள்ளது.
சுதாகர் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள தமிழக பட்டாலியனுக்கு மாற்றலாகி டெல்லி சென்றார். இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி விஜயலெட்சுமி தனது குழந்தை வைஷ்ணவியுடன் மாயமானார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சுதாகர் தான் டெல்லியில் போலியான பெயரில் விமானம் மூலம் சென்னைக்கு வந்து விஜயலெட்சுமியை குத்திக் கொலை செய்துவிட்டு, குழந்தையை ஒரு ஆசிரம வாயிலில் விட்டுவிட்டு தப்பினார் என்று தெரியவந்தது.
லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்தபோது, சுதாகர் தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதற்கிடையே சுதாகர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
விஜயலெட்சுமி மிக அழகாக இருப்பார். அவருக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் நண்பர்கள் உண்டு. திருமணத்திற்கு முன் ஒரு வாலிபரை காதலித்து, அவருடன் விஜயலெட்சுமி உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. அது குறித்து விஜயலெட்சுமியிடம் நான் விசாரித்தேன். அதிலிருந்து எங்களுக்கு இடையே தகராறு முற்றியது.
இந் நிலையில் நான் டெல்லிக்கு மாற்றப்பட்டேன். இதன் பின்னர் இங்கே தனியே இருந்த விஜயலெட்சுமி சுதந்திரமாக சுற்றத் தொடங்கினார். பழைய காதலன், புதிய ஆண் நண்பர்கள் என பலருடன் சுற்ற ஆரம்பித்தார்.
மாலை வேளைகளில் ஆண் நண்பர்களை அவர் தேடிச் செல்வதாக இங்குள்ள எனது உறவினர்கள் தகவல் தந்தனர். இதுபற்றி எனது நண்பன் மூலமாக கண்காணிக்க ஏற்பாடு செய்தேன். அப்போது விஜயலெட்சுமி 5 கள்ளக் காதலர்களுடன் மாறி மாறி உல்லாசமாக இருப்பது தெரியவந்தது.
கிட்டத்தட்ட அவர் ஒரு விபசாரியாகி விட்டதை உணர்ந்தேன். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
எனது பெங்களூர் நண்பர் ரவியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன். அதன்படி கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தேன். அன்று இரவு மனைவியிடம் அவரது நடவடிக்கைகள் குறித்துக் கேட்டேன்.
அதற்கு அவர் எனக்கு பிடித்திருந்தால் எத்தனை பேரையும் ஏற்றுக் கொள்வேன் என தமிர்த்தனமாக பேசினார். இதனால் கத்தியால் அவரைக் குத்திக் கொலை செய்தேன்.
அப்போது எனது மகள் தூங்கிக் கொண்டிருந் தாள். நண்பர் ரவியின் உதவியுடன் பிணத்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வெங்கல் தாமரைபாக்கம் ஆற்று பாலத்தின் கீழ் செல்லும் குழாயில் சொருகி வைத்துவிட்டு வந்தேன்.
பின்னர் உடனடியாக டெல்லிக்குத் திரும்பி அன்றைய தினம் பணியில் இருந்ததாகக் காட்டிக் கொண்டேன். எனது குழந்தையை நண்பர் மூலமாக அம்பேத்கார் பஸ் நிலையம் அருகே விட்டுச் சென்றேன்.
விஜயலெட்சுமியும் மகளும் காணாமல் போனது குறிச்சு அவரது தாய் எனக்கு தகவல் தந்தார். உடனே ஆவடி போலீசில் புகார் கொடுக்கச் சொன்னேன். நானும் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து பரிதவிப்பது போல நடித்தேன்.
ஆனால் போலீசார் உண்மையைக் கண்டுபிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் சுதாகர்.
கொலை நடந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பின் சுதாகரை போலீசார் அமுக்கியது குறிப்பிடத்தக்கது.
விஜயலெட்சுமியின் பிணத்தை மறைக்க உதவிய அவரது நண்பர் ரவியையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் பிணத்தை கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளை மறைக்க உதவிய வேலூர் சிவா என்ற வாலிபரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
போலி பெயரில் விமானத்தில் வந்து மனைவியை கொன்ற கணவர்
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications