23 உருது ஆசிரியர்கள் நியமனம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் தொடக்கப் பள்ளிகளில் 23 உருது ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மாநகராட்சியின் கீழ் 19 உருது தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 2,356 மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிகளில் 36 உருது மொழி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 1997-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக, மு.க.ஸ்டாலின் இருந்த பொழுது மாநகராட்சி உருது பள்ளிகளுக்கு 27 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி உருது பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது சென்னை மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் உருதுமொழி வழி கல்வி பயிலும் மாணவ-மாணவியர்களின் கல்வி நலனை உயர்த்திடும் வகையில் மாணவ-மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 23 உருதுமொழி வழி இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பகம் வழியாக இனவாரி சுழற்சியின் அடிப்படையில் ரூ.4,500-125-7,000 என்ற ஊதிய விகிதத்தில் உடனடியாக நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, நேற்று சென்னை கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி உருது பள்ளிகளுக்கு 23 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் ஆணைப்படி சென்னை மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 75 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 8 உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகம் வழியாக இனவாரி சுழற்சியின் அடிப்படையில் உடனடியாக நிரப்புவதற்கும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications