தேசிய அளவில் விவசாயக் கடன்களை ரத்து செய்ய கருணாநிதி கோரிக்கை

முரசொலியில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவரான சோனியா காந்தி அம்மையாரை அகில இந்திய அளவிலான விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் முறையிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2006ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலேயே ரூ.7,000 கோடி விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தேன். இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில அரசு இத்தனை கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த வரலாறு இதுவரை கிடையாது.
நம்மை முன்னுதாரணமாகக் காட்டித் தான் மற்ற மாநிலங்களிலும், இந்திய அளவிலும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. சோனியா காந்தியை விவசாயிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் பட்ஜெட் வெளியாகவுள்ள இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களின் கோரிக்கையை நானும் பரிந்துரை செய்கிறேன். ஜனநாயகத்தை மதித்துப் போற்றும் மாண்புடைய அம்மையார் உழவர் வேண்டுகோளை உரிய நேரத்தில் ஏற்பார் என்ற நம்பிக்கையும் உறுதியும் எனக்குண்டு என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications