என்னையும் ராமதாஸையும் பிரிக்க முடியாது-திருமாவளவன்

சென்னை லயோலா கல்லூரியில் தமிழ்ப் பண்பாடும், சாதிப் பிரிவினையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர் பேசினர்.
ராமதாஸ் பேசுகையில், தலித் மக்களுக்கும் மிக பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்களுக்கும் இடையே இதற்கு முன்பு தகராறு ஏற்பட்டபோது அன்றைய கலவரத்துக்கு காரணம் நான் தான் என என் மீது பழி சுமத்தப்பட்டது.
சில தலைவர்கள் என்னை 'வீடு கொளுத்தி' என்று கூட கூறினார்கள். அப்படி சொன்னவர்களே மனம் மாறி ராமதாஸ் அப்படிப்பட்டவர் கிடையாது என பின்னர் கூறினார். இரு சமுதாய மக்களும் அமைதியாக ஒற்றுமையாக வாழ அப்போதே நான் தான் முயற்சி எடுத்தேன் என்றார்.
திருமாவளவன் பேசுகையில்,
இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதால் டாக்டர் ராமதாஸ் வருவாரா, வரமாட்டாரா என நிகழ்ச்சி நடத்துபவர்கள் சந்தேகப்பட்டதாகக் கூறினார்கள்.
டாக்டர் ராமதாசுடன் நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வளர்ச்சியில் ராமதாசின் பங்கு அதிகம். என்னையும் டாக்டர் ராமதாசையும் யாராலும் பிரிக்க முடியாது. வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாயம் இடையே பகையை குறைக்க பாடுபட்டவர் ராமதாஸ்.
ஜாதி, மதம் நம் பண்பாட்டை சிதைத்து விட்டது. ஜாதிப் பிரிவினை அதிகமானதற்கு மத மோதல்கள் தான் காரணம் என்றார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications