சன் டிடிஎச்சில் யுடிவி சேனல்கள்!
சென்னை: சன் டிவியின் சன் டைரக்ட் டிடிஎச் சேவையில், யுடிவியின் நான்கு சேனல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக யுடிவி சாப்ட்வேர் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அங்கமான, யுடிவி குளோபல் புராட்காஸ்டிங் நிறுவனமும், சன் டைரக்டர் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதன் மூலம் யுடிவியின் சேனல்களான பிந்தாஸ், பிந்தாஸ் மூவிஸ், வேர்ல்ட் மூவிஸ், யுடிவி மூவிஸ், விரைவில் தொடங்கப்படவுள்ள யுடிவி நியூஸ் ஆகியவை சன் டைரக்ட் டிடிஎச் மூலம் ஒளிபரப்பாகும்.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்தாஸ் மற்றும் பிந்தாஸ் மூவிஸ் ஆகிய இரு சேனல்களும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஒளிபரப்புகின்றன. வேர்ல்ட் மூவிஸ் சேனல் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போலிஷ், ரொமானியன், டச்சு, ரஷ்யன், தாய், ஜேப்பனிஸ், கொரியன், ஜெர்மன், பெர்சியன், இத்தாலியன் மொழிப் படங்கள் காட்டப்படும். அனைத்துப் படங்களும் ஆங்கில சப் டைட்டிலுடன் ஒளிபரப்பாவது இதன் முக்கிய அம்சமாகும்.
யுடிவி மூவிஸ் சேனல் முற்றிலும் இந்தி திரைப்பட சேனலாகும். இது இந்த மாத கடைசியில் தொடங்கப்படவுள்ளது. மொத்தம் 300 இந்திப் படங்களின் உரிமையை யுடிவி வாங்கியுள்ளது.
ஜோதா அக்பர், ரங் தே பசந்த், தி நேம்சேக், லைப் இன் எ மெட்ரோ ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் யுடிவியின் தயாரிப்பு என்பது நினைவிருக்கலாம். எனவே இந்தப் படங்களை விரைவில் டிவி நேயர்கள் யுடிவி மூலம் காண முடியும்.
ஆங்கிலத்தில் வெளியாகவுள்ள யுடிவி நியூஸ் சேனல், மார்ச் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது. இது முற்றிலும் ஆங்கில செய்தி சேனலாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய டிடிஎச் சேவையாக சன் டைரக்ட் டிடிஎச் உருவெடுத்து வருவதால் சன் டிடிஎச்சுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக யுடிவி தெரிவித்துள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications