திரிபுராவில் சட்டசபை தேர்தல்-அமைதியான வாக்குபதிவு

வங்கதேசத்தை ஒட்டியுள்ள வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு இன்று தேர்தல் நடந்தது.
கடந்த பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிதான் இங்கு ஆட்சி புரிந்து வருகிறது. இந்த முறை கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
மொத்தம் 313 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் 28 பேர் பெண்கள். 20 லட்சத்து 35 ஆயிரத்து 877 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான புரட்சிகர சோசலிஷ கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 47 தொகுதிகளில் போட்டியிடுகிரது. அதன் கூட்டணிக் கட்சிகளான திரிபுரா தேசியவாத கட்சியும், பி.டி.எஸ். கட்சியும் முறையே 11 மற்றும் 2 சீட்களில் போட்டியிடுகின்றன.
தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200 கம்பெனி கூடுதல் மத்திய புற ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகள் அனைத்தும் புற ராணுவப் படையினரின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.
நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ள தொலைதூர பகுதிகளில் திரிபுரா துப்பாக்கிப் படையினரும், மாநில புறக்காவல் படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications