நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்கள் அதிகரிக்குமா?: குழு ஆய்வு
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அகில இந்திய மருததுவ குழுவினர் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் ஏற்கனவே 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு 65 பேராசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் மேலும் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அகில இந்திய மருததுவ கவுன்சிடம் தமிழக அரசு கோரி வருகிறது.
இதைத் தொடர்ந்து அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் பல்வேறு குழுவினர் நெல்லை மருததுவ கல்லூரி மற்றும் ஐகிரவுண்ட் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மற்றும் வகுப்பறைகள, கட்டிட வசதிகள், பேராசிரியர்கள் எண்ணிக்கை போன்றவைகளை ஆய்வு செயது வந்தனர்.
இப்போது இந்த ஆய்வுப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந நிலையில் நேற்று டாக்டர் அகர்வால் தலைமையில் டாக்டர்கள் மும்ரோ, திவாங்கர் ஆகியோர் கொண்ட அகில இந்திய மருத்துவ கவுன்சில் டீம் மருத்துவக் கல்லூரியின் டீன் விநாயகத்திடன் ஆலோசனை நடத்தியது.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பகுதி, மருந்தகப் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பகுதி, பேருகால வார்ட் அவரச சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு, காசநோய் வார்ட், உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் பிரிவு போன்றவறறையும் இவர்கள் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த குழுவினர் அரசு மருத்துவ கல்லுரிக்கு சென்றனர். அங்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் எண்ணிக்கையை சரி பார்த்தனர். மேலும் வகுப்பறைகள், லேப் அறைகள், கட்டிட வசதிகள், இருக்கை வசதிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு திருப்திகரமாக முடியும் பட்சத்தில் மருததுவ கல்லூரியில் ஆண்டுதோறும் 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications