தங்கையின் காதலனை அடித்து கொன்ற அண்ணன்
திருச்சி: தங்கையுடன் உல்லாசமாக இருந்த அவரது காதலரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றார் அண்ணன். அவரையும், அவரது கூட்டாளியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி துவாக்குடியை சேர்ந்தவர் வடிவேல் (22). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் செல்வியும் (15) காதலித்து வந்தனர்.
செல்வி 10வது படித்து வருகிறார். வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து இனிமை கண்டு வந்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன் செல்வி குடும்பத்தினர் ஒரு திருமணத்திற்காக சேலம் போய் விட்ட நிலையில் வீட்டில் செல்வி, அவரது அண்ணன் ராஜா, தம்பி சின்னத்துரை மட்டுமே இருந்துள்ளனர்.
இந் நிலையில் செல்வியின் வீட்டுத் திண்ணையில் வடிவேல் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். தலை கொடூரமாக தாக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தரவே விரைந்து வந்த போலீஸார் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
செல்வியிடம் போலீஸார் விசாரித்தபோது நடந்ததை அவர் விவரமாக கூறினார்.
சம்பவ இரவில் ராஜா வேலைக்குப் போய்விட வீட்டில் செல்வியும், சின்னத்துரையும் மட்டும் இருந்துள்ளனர். சின்னத்துரை தூங்கிவிட, அங்கு வந்த வடிவேலுடன் செல்வி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நேரத்தில் ராஜாவும், அவருடைய நண்பர் சேட்டுவும் வீட்டுக்குள் வந்துள்ளனர். தங்கையும் வடிவேலும் இருந்த கோலத்தைப் பார்த்து கொதிப்படைந்த ராஜா, வடிவேலுவை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்கிடையே கடும் சண்டை நடந்துள்ள. அப்போது இரும்புக் கம்பியால் வடிவேலுவை தாக்கியுள்ளார் ராஜா. இதில் தலையில் அடிபட்டு வடிவேல் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து ராஜாவும், சேட்டுவும் தப்பி ஓடி விட்டனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications