விஜய்காந்த் வந்தால் திமுகவை காங். கழற்றிவிடும்-பாஜக

Subscribe to Oneindia Tamil

Ganesan
தேனி: காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்துவிட்டால், காங்கிரஸ் கூட்டணியில் திமுகவே இல்லாமல் போகலாம் என பாஜக தமிழகத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

தேனியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

நாடாளுமன்ற தேர்தலிலும் திமுகவுடன் பாமக கூட்டணி தொடரும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். தொகுதிப் பங்கீட்டில் அவர் எதிர்பார்த்ததை விட அதிகமான இடங்களைத் தர திமுக முன் வந்திருக்கலாம். இதனால் தான் 200 சதவீதம் இந்த கூட்டணியில் தான் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கக் கூடும்.

நடிகர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கூட்டணி பற்றி பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி கூட்டணி சேர்ந்தால் திமுக கூட்டணியில் விஜயகாந்த் கேட்கும் தொகுதி பங்கீட்டை கொடுக்க முடியாது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவே இல்லாமல் போகலாம்.

மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டே இடதுசாரிக் கட்சிகள் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அந்தக் கூட்டணியால் அறிவிக்க முடியாது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்துள்ளதை அனைவரும் ஏற்று கொண்டுவிட்டனர்.

சேது சமுத்திரத் திட்டம், ராமர் பாலத்தை பாதுகாப்பது, நரேந்திர மோடி, பல்வேறு விஷயங்களில் பாஜகவும் அதிமுகவும் ஒத்த கருத்துடன் உள்ளன.

இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது என்றார் கணேசன்.

அதிமுகவுடன் கூட்டணி-சின்ஹா:

இந் நிலையில் கோவை வந்த மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம பேசுகையில்,

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கூட்டணி வைப்பதற்கு தகுந்த கட்சியாக அதிமுகவை கருதுகிறோம்.

திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்தால், பாஜக அதிமுகவை அணுகுவதே சரியாக அமையும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+