திருமணமான 10 நாளில் காதலனுடன் ஓடிய பெண்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே திருமணமான பத்தே நாளில் கணவருடன் வாழ மறுத்து காதலனுடன் சென்றார் பெண்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ள தெற்கு ஆவரங்காடை சேர்ந்த காசிராஜனின் மகள் பொன் முனியம்மாள்.
இவரும் மணிமுத்துராஜ் என்பவரும் காதலித்து வந்தனர்.
ஆனால், இதை ஏற்காத காசிராஜன், மகளை கடந்த 11ம் தேதி அவரது முறைமாமன் கருப்பசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இந் நிலையில் கடந்த 18ம் தேதி கணவர் கருப்பசாமி வெளியே சென்ற நேரத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் முனியம்மாள்.
இதையடுத்து தனது மகளை காணவில்லை என காசிராஜன் ஓட்டபிடாரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடி ஓட்டபிடாரம் போலீஸ் நிலையம் வந்தது. இதையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பொன் முனியம்மாள் கணவருடன் செல்லமாட்டேன். காதலருடன் தான் செல்வேன் என்று உறுதியாக கூறியதால் வேறுவழியின்றி போலீசார் காதலருடன் அவரை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications