ஸ்டிரைக் வாபஸ்-ஆனாலும் வங்கிகள் மூடல்!
சென்னை: இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்தத்தை பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் ஒத்தி வைத்தாலும் சென்னைப் புறநகரில் பல வங்கிகள் மூடிக் கிடந்ததால் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
ஊதிய உயர்வு, சிறு வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கக் கூடாது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்யக் கூடாது, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இயற்கையான முறையில் மரணமடையும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்ற கோரிக்கைககளை முன் வைத்துள்ளனர் வங்கி ஊழியர்கள்.
இதை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்தனர்.
இதையடுத்து மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது. மத்திய அரசின் சார்பில் இந்திய வங்கிகள் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
இதில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்க இந்திய வங்கிகள் சங்கம் முன் வந்தன. இதைத் தொடர்ந்து வங்கி ஊழியர் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை நகருக்குள் உள்ள பல்வேறு வங்கிகள் இன்று காலை சற்று தாமதமாக திறக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன.
ஆனால் சென்னைப் புறநகரில் நிலைமை தலைகீழாக இருந்தது. தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான வங்கிகள் மூடிக் கிடந்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, கனரா வங்கி என பல்வேறு அரசு வங்கிகள் மூடிக் கிடந்தன. அவற்றில் ஒரு சில ஏடிஎம் மையங்கள் செயல்பட்டன. ஆனால் பெரும்பாலான ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை.
ஸ்டிரைக் வாபஸ் என்ற அறிவிப்பால் இன்று வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள், அவை மூடிக் கிடந்ததால் பெரும் அதிருப்தி அடைந்தனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications