இந்திய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த திரிபுரா
அகர்தலா: சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 91.86 சதவீதம் பேர் வாக்களித்தன் மூலம் நாட்டின் தேர்தல் வரலாற்றில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது திரிபுரா.
கடந்த 23ம் தேதி நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 91.86 சதவீதம் பேர் வாக்களித்தனர். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமாக இதுவரை வாக்குகள் பதிவானதில்லை.
சில வாக்குச் சாவடிகளில் 99 சதவீதம் அளவுக்கும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன் சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த தேர்தலில் 86 சதவீத வாக்குகள் பதிவாயின. அது தான் இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது.
இப்போது இந்த சாதனையை திரிபுரா முறியடித்துவிட்டது. அதிலும் தேர்தல் மிக அமைதியாக எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
100 சதவீதம் தேர்தல் அடையாள அட்டைகளைக் கொண்டே தேர்தல் நடத்தப்பட்டதும் குறி்ப்பிடத்தக்கது. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் சில இடங்களில் 5 மணிக்குள் வரிசையில் நின்றவர்கள் இரவு 11.30 வரை வாக்களித்துள்ளனர். இதுவும் ஒரு சாதனையாகும்.
இத் தேர்தலில் காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications