தாதாவாக வலம் வந்த கொலையான வழக்கறிஞர்!
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஜினிகாந்த் பெரும் தாதாவாக வலம் வந்துள்ளார்.
அடியாட்களை உடன் வைத்துக் கொண்டு வக்கீல்களையும், நீதிபதிகளையும் மிரட்டி வந்துள்ளார். வக்கீல் சங்கத் தேர்தலில் தோற்ற கோபத்தில் தன்னைக் கொலை செய்ய முயன்றதால்தான் அவரைத் தாங்கள் போட்டுத் தள்ளியதாக கைதாகியுள்ள வக்கீல் கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் 2 நாட்களுக்கு முன்பு மாலையில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவரது மனைவி லலிதா, திமுக முன்னாள் எம்.எல்.ஏ செங்கை சிவத்தின் சகோதரர் மகள் ஆவார்.
ரஜினிகாந்த் கொல்லப்பட்டது குறித்து பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் வக்கீல் போலவே செயல்படவில்லை. பெரிய தாதா போல வலம் வந்துள்ளார். அவருடன் எப்போதும் 10, 15 அடியாட்கள் இருப்பார்களாம். எதிர் தரப்பு வக்கீல்களை மிரட்டுவது, பணியாவிட்டால் தாக்குவது, மாஜிஸ்திரேட்டுகளை மிரட்டுவது என்று அடாவடி செய்து வந்துள்ளார்.
ரஜினிகாந்த் மீது சென்னை நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் 38 வழக்குகள் உள்ளனவாம். எல்லாம் ஆள் கடத்தல், கொலை முயற்சி, வழிப்பறி என பெரிய பெரிய பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகள். ஆனால் எதிலுமே அவரைக் கைது செய்ய முடியவில்லை. காரணம் அவருக்கு
இருந்த ஆள் பலம், பண பலம், அடியாள் பலம்.
வக்கீல்களுக்கு மட்டுமல்லாமல் போலீஸாருக்குமே பெரும் சவாலாக இருந்து வந்த ரஜினிகாந்த் இப்போடு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த்தால் பாதிக்கப்பட்ட வக்கீல் கண்ணன் என்பவரது தலைமையில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. இக்கொலை தொடர்பாக கண்ணன் தவிர சத்யா, கதிரேசன், கராத்தே பாபு, ஜெயசூர்யா, கார் டிரைவர் அசோக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்ணன் கொடுத்துள்ள வாக்குமூலம் ரஜினிகாந்த்தின் பயங்கர மறு பக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கண்ணன் கொடுத்த வாக்குமூலம்:
ரஜினிகாந்த வக்கீல் போலவே இருக்க மாட்டார். ஒரு தாதா போலத்தான் அவரது நடத்தைகள் இருக்கும்.
வக்கீல்களுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபடுவார். வழக்குகளை குழப்பி திசை திருப்பி விடுவார். மாஜிஸ்திரேட்டுகளையும் அவர் மிரட்டுவார். அவரால் பல வழக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன, அப்பாவிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான் வக்கீல்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் நானும், நாகராஜும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டோம். நாகராஜுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் செயல்பட்டார்.
என்னைப் போட்டியிலிருந்து விலகுமாறு மிரட்டினார். எங்களது தரப்பு வக்கீல்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பெட்டிகளைக் கடத்த தீர்மானித்து நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கோர்ட் வளாகத்தில் இருந்தார் ரஜினிகாந்த்.
இதை அறிந்த போலீஸார் பெருமளவில் திரண்டு வந்து அந்த ரவுடிகளை விரட்டியடித்தனர். இந்த ஆத்திரத்தில் என்னை வெட்டிக் கொல்ல ரவுடிகளுக்கு உத்தரவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் போலீஸாரின் உதவியுடன் நான் தப்பிப் பிழைத்தேன்.
இருந்தாலும் ரஜினிகாந்த் என்னை எப்படியும் ஒழித்துக் கட்டி விடுவார் என நினைத்தேன். எனவேதான் அவரைப் போட்டுத் தள்ள தீர்மானித்து தீர்த்துக் கட்டினோம். திட்டமிட்டு ரஜினிகாந்த்தை கொலை செய்து விட்டோம் என்று கூறியுள்ளார் கண்ணன்.
வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடம் கட்டப் பஞ்சாயத்து நடத்துவதே ரஜினிகாந்த்தின் முக்கிய வேலையாகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 4 கோடி வரை கட்டப் பஞ்சாயத்து மூலம் வசூலித்துள்ளாராம். 2 கார்களையும் வாங்கியுள்ளார்.
சமீபத்தில் உயர்நீதிமன்ற வக்கீல் மோகன்தாஸ் ஒருவரையும் ரஜினிகாந்த் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். இது உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், வக்கீல்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுமட்டுமல்லாமல், ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆங்கிலோ இந்தியன் வாலிபர்கள் சிலரை வைத்துக் கொண்டு இரவு நேர பணிக்கு செல்லும் வெளி மாநில இளம் பெண்களை கடத்தி சில்மிஷங்களில் ரஜினிகாந்த் கும்பல் ஈடுபட்டதாகவும் கண்ணன் கூறியுள்ளார்.
24 மணி நேர பாதுகாப்பு:
இதற்கிடையே, எழும்பூர் கோர்ட் வளாகம் வன்முறைக் களமாக மாறி வருவதாலும், அடிக்கடி இங்கு அடிதடி நடப்பதாலும் கோர்ட் வளாகத்தில் 24 மணி நேர பாதுகாப்பு போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் கோர்ட்டில் கடந்த 1996ம் ஆண்டு விஜி என்கிற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு மாஜிஸ்திரேட் முருகானந்தம் வக்கீல்களால் தாக்கப்பட்டார். மேலும், சாட்சி சொல்ல வருபவர்களும், பொதுமக்களும் அடிக்கடி தாக்கப்படுவது சகஜமான விஷயமாகி விட்டது.
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் 24 மணி நேர பாதுகாப்பை போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எழும்பூர் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் ராமராஜுடன், மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.
இதைத் தொடர்ந்து நாளை முதல் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர தீவிரப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டுக்கு வருவோர் சோதனையிடப்படுவார்கள். மேலும் மாலை 6 மணிக்கு கோர்ட் வளாகம் மூடப்பட்டு விடும். உள்ளே யாரும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications