• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர், இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ& ஜகார்தா: இந்தோனேஷியாவில் மீண்டும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந் நாட்டு நேரப்படி நேற்றிரவு 9.46க்கு சுமத்ரா தீவை இந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் இது 6.6 புள்ளிகளாக பதிவானது.

கடலுக்கடியில் சுமார் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் சுனாமி பீதி ஏற்பட்டு இப் பகுதி மக்கள் இரவில் வீடுகளை விட்டு ஓடினர். ஆனால், சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்:

இந் நிலையில் இன்று பகல் 12.55 மணியளவில் ஜம்மூ-காஷ்மீரிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோளில் இது 3.9 என்ற அளவில் பதிவானது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X