டிக்கெட்டில் புறப்படும் நேரத்துடன் ரயில் போய் சேரும் நேரம்!!!

நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
வழக்கமாக நம் நாட்டில் ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பாது, கிளம்பினாலும் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேராது. அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
ரயில் கிளம்பும் நேரங்கள் ஓரளவுக்கு சரியாகிவிட்டன. ஆனால், போய்ச் சேரும் நேரம் தான் இன்னும் சரியாகவில்லை.
இதற்கும் தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றாக ரயில் போய்ச் சேரும் நேரத்தையும் டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் லாலு. இது ரயில்வே ஊழியர்களை மேலும் அதிக பொறுப்புடன் பணியாற்ற வைக்கும்.
அதே போல தீவிரவாத செயல்கள் அதிகமாகிவிட்டதால் பாதுகாப்பு கருதி ரயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர்கள் கருவிகள் பொறுத்தப்படும் என்றும் லாலு அறிவித்துள்ளார்.
மேலும் முக்கிய ரயில் நிலையங்களில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் பொறுத்தி சிசிடிவி பயணிகளை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்எம்எஸ் அனுப்பி டிக்கெட் கன்பார்ம் ஆகிவிட்டதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் புதிய சேவையை ரயில் தொடங்கவுள்ளது.
ரயில் நிற்கும் ஸ்டேசனின் பெயர், அடுத்த ஸ்டேசன் குறித்த விளக்கம் ஆகியவற்றை ரயில் பெட்டிகளில் டிஜிட்டல் போர்ட்கள் மற்றும் தானியங்கி அறிவிப்பு வசதி மூலம் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க தன் வசம் உள்ள நிலத்தை ரயில்வே சார்ந்த பணிகளுக்காக தனியாருக்கு குத்தகை விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அனைத்து கோச்சுகளிலும் பசுமை டாய்லெட்டுகள் அமைக்கப்படவுள்ளன.
நாட்டில் மிக நெரிசல் மிகுந்த 30 ரயில் நிலையங்களில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்த வசதி உருவாக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளி்ல் 6,000 தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. மேலும் ஸ்மார்ட் கார்ட்கள் மூலமும் டிக்கெட் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே சேவைகளை மேலும் நவீனமயாக்கவும் பயணிகளுக்கு சேவைகள் விரைந்து கிடைக்கவும் நாடு முழுவதும் அதிக அளவில் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படவுள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications