'சவுண்ட் சரவணனால்' பாதியில் நின்ற அதிமுக கூட்டம்
சேரன்மாதேவி: சேரன்மகாதேவியில் நடந்த அதிமுக பொதுகூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் பாதியிலே பேசுவதை நிறுத்தி விட்டு மேடையில் இருநது இறங்கி சென்ற முன்னாள் எம்எல்ஏ மனோஜ்பாண்டியனை அதிமுகவினர் மறிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு சேரன்மகாதேவியில் பஸ் நிலையம் அருகே அதிமுக பொதுகூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் மூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது அதிமுக மாநில இலக்கிய அணி பேச்சாளர் சவுண்ட் சரவணன் என்பவர் மேடையில் ஏறி தன்னையும் பேச அனுமதிக்க வேண்டும் என கூறினார்.
இதனால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கட்சியினர் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இவர் (பி.எச்பாண்டியனின் மகன்) பேசியபோது, புரட்சித் தலைவியின் ஒரே சிந்தனை தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. திமுகவினர் அதி்முகவினரை துன்புறுத்தி வருகின்றனர்.
தற்போது ஜாதி, மதக்கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் சட்டம் ஓழுங்கி சீர்குலைந்து கிடக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தபோது சவுண்ட் சரவணன் மீண்டும் குறுக்கிட்டு நான் பேச வேண்டும் என கூறினார்.
சரவணனுக்கு ஆதரவாக மற்ற அதிமுக பிரமுகர்களும் கோஷம் போட்டனர். இதனால் கோபமடைந்த மனோஜ் பாண்டியன் தனது பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டு மேடையில் இருந்து வேகமாக இறங்கி தனது காரில் ஏறிச் சென்றார்.
அப்போது அவரது காரை அதி்முகவினர் சிலர் மறிக்க முயன்றனர். அவர்களை புறம் தள்ளிவிட்டு வேகமாக காரில் ஏறிச் சென்று விட்டார்.
ஆத்திரமடைந்த உள்ளூர் அதி்முகவினர் மனோஜ் பாண்டியனுக்கு எதிராகவும், நயினார் நாகேந்திரனுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications