வருகிறது 'ஷாப்பிங் பிரா'!!!
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ட்ரூய்ம்ப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் பெண்களின் உள்ளாடைகளை வடிவமைக்கும் பிரபல நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் விதம் விதமான, வித்தியாசமான பிரா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈகோ குளோப், மை சாப்ஸ்டிக்ஸ் பிரா, தி வார்ம் பிஸ், ரீசைக்கிள் பெட் என்பவை இந்த புதிய வகை பிராக்கள். இதில் மை சாப்ஸ்டிக்ஸ் பிரா என்பது படு வித்தியாசமானதாக உள்ளது. இதை ஷாப்பிங் பிரா என்று இந்த நிறுவனம் செல்லப் பெயரிட்டுள்ளது.
மை சாப்ஸ்டிக்ஸ் பிராவில் சீனாவின் உணவருந்தும் குச்சிகளை ஒரு பக்கம் வைக்கக் கூடிய வகையில் இட வசதி கொண்டது.
போகும் இடத்தில் குச்சியைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம்முடனேயே இந்த குச்சியையும் கொண்டு போகலாம்.
ரீசைக்கிள் செய்யப்பட்ட மரக் குச்சிகள் இவை. குச்சிகள் உடலுடன் உரசாத வகையில், மிகவும் கவனத்துடன் இந்த பிரா டிசைன் செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த பிராவைத் தொடர்ந்து பெண்களின் பான்டீஸ் உள்ளிட்ட பிற உள்ளாடைகளையும் விதம் விதமாக வடிவமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு போட்டியையும் அது அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியில் 40க்கும் மேற்பட்ட நாடுளைச் சேர்ந்த உடை வடிவமைப்பு படிப்பைப் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அனைவரையும் கவரும் வகையிலான, நூதன உள்ளாடைகளை இவர்கள் வடிவமைக்க வேண்டும்.
இதன் இறுதிப் போட்டி பெய்ஜிங்கில் வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு 15 ஆயிரம் யூரோ பரிசாக அளிக்கப்படும்.
மேலும், வெற்றி பெறும் டிசைன், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு அதை டிசைன் செய்த மாணவர் அல்லது மாணவியின் பெயருடன் உலக அளவில் முக்கிய கடைகளில் விற்பனைக்கு விடப்படும் என்று ட்ரூய்ம்ப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தார்ஸ்டன் அல்லென்ஸ்டைன் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications