ஆன்லைனில் டாடாவின் நானோ கார் வாங்கலாம்!?

Subscribe to Oneindia Tamil

Nano car
மும்பை: டாடாவின் குட்டிக் காரானா டாடா நானோவை, ஆன்லைன் மூலம் புக் செய்து வாங்கும் முறையை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள டாடா மோட்டார்ஸ், இதுதொடர்பாக வாடிக்கையாளர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவரான சுபோத் மராத்தே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல பொருட்கள் இப்போது ஆன்லைன் மூலம்தான் விற்பனை செய்யப்படுகின்றன. இ வர்த்தகம் எனப்படும் எலக்ட்ரானிக் வர்த்தகம் வளர்ந்து வரும் கால கட்டம் இது.

வெளிநாடுகளில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களை ஆன்லைன் மூலம்தான் விற்கின்றன. இதன் மூலம் கார்களைத் தேர்வு செய்வது எளிதாகும், வாங்கும் சிரமமும் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

டாடாவின் இணையதளத்தில், புதிய காரை எப்படித் தேர்வு செய்வது, அதன் நிறம் என்ன, தொழில்நுட்பத் தகவல்கள் உள்ளிட்டவை விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுமக்களின் கருத்துக்களை அறிந்த பின்னர் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என டாடா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை புதிய கார்களை ஆன்லைன் முலம் வாங்கும் வசதியை எந்த கார் நிறுவனமும் இதுவரை கொண்டிருக்கவில்லை. செகண்ட்ஹாண்ட் கார்களுக்குத்தான் இந்த வசதி தற்போது உள்ளது. எனவே டாடா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தினால் அதுவும் ஒரு வகையில் புரட்சியாகவே அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+