ரயில்வே பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்ல-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2008-2009-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ரயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.
இந்த பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என அமைச்சர் மந்திரி லாலு பிரசாத் யாதவ் சொல்லி இருக்கிறார். அவரை வேண்டுமானால் மகிழ்விக்கக்கூடிய பட்ஜெட்டாக இருக்கலாம்.
மூத்த குடிமக்கள், மாணவிகளுக்கு சலுகை உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளனர். முழுக்க முழுக்க வாக்கு வங்கியை மனதில் கொண்டே ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் இப்படித்தான் இருக்கும் என்பது முன்பே அனைவருக்கும் நன்கு தெரியும்.
ரயிலில் அனைத்து வகுப்புகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண மக்கள் அதிகம் பயணம் செய்யக்கூடிய 2ம் வகுப்புக்கான கட்டணத்தை வெறும் 5 சதவீதம் குறைத்திருப்பது துரதிர்ஷ்டம்.
ஆனால், முதல் வகுப்பு ஏ.சி கட்டணத்தை அதிகளவு குறைத்திருக்கிறார்கள். ரயில்வே துறை எல்லா நிலைகளிலும் லாபம் ஈட்டி உள்ளதாக கூறி உள்ளனர். ஆனால் குறைந்த அளவே கட்டணத்தை குறைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு சில புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சாதாரண மக்களுக்காக குறிப்பாக எதுவும் செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு ரெயில்வே துறைக்கு ரூ.25,000 கோடி லாபம் கிடைத்திருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறுகிறார். ஆனால், புதிய வழித்தடங்கள், அகல ரெயில் பாதை மாற்றும் பணி உள்பட புதிய திட்டங்கள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.
2007ம் ஆண்டை சுகாதார ஆண்டாக ரயில்வே அறிவித்தது. ஆனால், ரயில்வே நிலையங்கள், ரயில்கள், பயணிகள் ஓய்வறை ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு சில புதிய வழித்தடங்கள், கூடுதல் ரயில் பாதைகள், அகல ரயில் பாதை மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டாலும், தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து அமைப்பது பற்றிய அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில், இந்த ரயில்வே பட்ஜெட் முழுக்க முழுக்க நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் எவ்விதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லை என ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications