போலி பாஸ்போர்ட்-சென்னையில் 3 குஜராத்திகள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுகளுடன் குஜராத்தைச் சேர்ந்த 3 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த தீபக் குமார் (31), ஹேமந்த் குமார் (29), திலீப் குமார் (29) ஆகியோர் கொழும்பிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கினர்.
இவர்களது பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவை போலியானவை என்று தெரியவந்தது. மூவரும் கோலாலம்பூரில் இந்த விமானத்தில் ஏறியுள்ளனர்.
இதையடுத்து மூவரும் விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications